தொடர்ந்து அதிகரிக்கும் மோசடிகள் – தடுப்பது எப்படி? முழு விவரங்களுடன்!
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் காரணமாக நாடு வளர்ச்சியை நோக்கி நகர்கிறது. அதே சமயம் நூதன முறையில் நடைபெறும் மோசடிகளும் அதிகரித்து வருகிறது. போலியான பரிசுகள் வழங்குவது, ATM அட்டை Lock ஆகியுள்ளது என்று கூறி பல காலமாக மோசடிகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது மோசடிக்காரர்கள் ஓய்வூதிய அலுவலக அதிகாரிகள் பேசுவதாக சொல்லி பொது மக்களை தொடர்பு கொண்டு மாற்றுத்திறனாளி திட்டம், வயது முதிர்ந்தோர் ஓய்வூதிய திட்டம், விதவை ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றின் கீழ் உங்களுக்கு பணம் வந்துள்ளது என்று சொல்லி பணத்தை பெற உங்களுக்கு உதவி செய்வதாக கூறி மோசடி செய்து வருகின்றனர்.
இப்படியும் PF கணக்கில் பேலன்ஸ் செக் பண்ண முடியுமா? இது நல்லா இருக்கே!
இதனை தடுக்க அரசு அலுவலகத்திலிருந்து அழைப்பதாகக் கூறும் எந்தவொரு நபரின் அடையாளத்தையும் சரிபார்க்க வேண்டும். தெரியாத எண்ணில் இருந்து வரும் அழைப்புகளை துண்டித்து விடுதல், தேவையில்லாமல் வரும் லிங்க் கிளிக் செய்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதன் மூலம் தங்களது வங்கி கணக்கு ஹேக் செய்யப்படும்.























