அரசு ஊழியர்களின் பென்ஷன் சட்டத்தில் புதிய மாற்றம்.. வெளியான முக்கிய தகவல்..!!
குடும்ப ஓய்வூதியம் என்பது அரசு ஊழியர் ஒருவர் பணியின்போது இறந்துவிட்டால், அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகையாகும். இது அரசு ஊழியரின் குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகிறது. மேலும், அனைத்து இந்திய சேவைகள் விதி 1958, விதி 22 இன் படி, அரசுப் பணியில் உள்ள ஒரு பெண் ஊழியர் அல்லது பென்ஷனர் இறக்கும் பட்சத்தில், உயிருடன் இருக்கும் அவருடைய வாழ்க்கைத் துணைக்கு ஃபேமிலி பென்ஷன் வழங்கப்படும். இந்நிலையில் இந்த பென்ஷன் விதியில் ஏற்பட்ட புதிய மாற்றம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இனி தமிழ் பெயர் பலகை வைக்காவிட்டால் அபராதம்.. அமைச்சர் சாமிநாதன் எச்சரிக்கை..!!
அதாவது, பணியாளர் மற்றும் பயிற்சித்துறை மார்ச் 28, 2025 அன்று வெளியிட்ட அறிக்கையில், “அரசுப் பணியில் உள்ள பெண் ஊழியர் அல்லது பெண் பென்ஷனர் விவாகரத்து சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தாலோ அல்லது தன்னுடைய கணவருக்கு எதிராக வரதட்சணை தடுப்புச் சட்டம் அல்லது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தாலோ தங்களது ஃபேமிலி பென்ஷனுக்கு கணவருக்கு பதிலாக தங்களுடைய குழந்தைகள் அல்லது குடும்பத்தாரை நாமினியாக அறிவிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது”.
























