
இந்தியாவை குறிவைத்து எலான் மஸ்க் போட்ட மாஸ்டர் பிளான்…!! ஏர்டெலை தொடர்ந்து ஸ்பேஸ் X நிறுவனத்துடன் கைகோர்க்கும் ஜியோ…!!
கடந்த 2016ல் ஜியோ நிறுவனமானது 4G சேவையை அறிமுகம் செய்து இந்திய டெலிகாம் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. மேலும், செயற்கைக்கோள் வாயிலாக பிராட்பேண்ட் அளிக்கும் சேவையை இந்தியாவிற்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகள் செய்து வந்தது . இது தொடர்பாக, முன்னதாக ஜியோ மற்றும் ஸ்பேஸ் X நிறுவனங்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இந்நிலையில் செயற்கைக்கோள் மூலம் இணையதள சேவைகளை அளிக்கும் திட்டம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
நீங்க செல்வ மகள் திட்டத்தில் கணக்கு வச்சுருக்கீங்களா…?? ஆனா எத்தனை வருடங்கள் முதலீடு செய்யனும்னு தெரியலையா..? படிச்சு தெரிஞ்சுக்கோங்க..!!
அதாவது, “இந்தியாவில் அதிவேக இணைய சேவையை கொண்டு வரும் நோக்கில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து, தற்போது ரிலையன்ஸ் ஜியோவும் எலான் மஸ்கின் ஸ்பேஸ் X நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும், இத்திட்டத்திற்கு இந்திய அரசு ஒப்புதல் வழங்கிய பின்னரே, ஸ்டார்லிங் பிளான்களை ஜியோவின் சில்லறை அவுட்லெட்கள் மற்றும் ஆன்லைன் தளங்கள் மூலம் விற்பனை செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது”.

























