
128 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி.. வெளியான சிறப்பு தகவல்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!
சர்வதேச ஒலிம்பிக் போட்டியின் 34-வது பதிப்பானது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெறவிருக்கிறது. இந்த ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை இடம் பெற செய்ய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) நீண்ட காலமாக முயற்சித்து வருகிறது. இத்துடன் பேஸ்பால், கராத்தே, ஸ்குவாஷ், கிக் பாக்சிங் உள்பட 9 விளையாட்டுகளை சேர்க்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாகவும், இதற்கான இறுதி முடிவுகள் 2025 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெறும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் வெளியிடப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில் 2028 ஒலிம்பிக் போட்டி குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
TNPSC ஆணையத்தில் குரூப் 1A காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || உடனே விரையுங்கள்!
அதாவது, “கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும் என பல நாள் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. இத்தொடரில் 6 அணிகள் பங்கேற்கும் என ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. மேலும், 1900 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் கடைசியாக இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் இடையே கிரிக்கெட் விளையாடப்பட்ட நிலையில் 128 ஆண்டுகள் பிறகு மீண்டும் 2028 ஆண்டு நடைபெற விருக்கும் இப்போட்டியை இந்திய வீரர்கள் மற்றும் அவர்களது ரசிகர்களும் உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர்”.























