
தமிழக மக்களுக்கு ஒரு நற்செய்தி..!! ஆவின் நிறுவனத்தில் ஏற்படவுள்ள புதிய மாற்றம்..!! வெளியான முக்கிய தகவல்..!!
ஆவின் என்பது தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (TNCMPFL) அமைப்பின் கீழ் இயங்கும் நிறுவனமாகும். இந்நிறுவனம் மூலம் பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகள் தமிழகம் முழுவதும் உள்ள மக்களின் பயன்பாட்டிற்காக நாள்தோறும் வழங்கி வருகிறது. இந்நிலையில் ஆவின் பால் டிப்போகள் குறித்து தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, “சென்னையில் பால் பாக்கெட் விற்பனை அதிகரித்து ஆவின் சந்தை விரிவடைந்துள்ளது. எனவே அடுத்த 5 ஆண்டுக்குள் ஆவின் சந்தை பங்களிப்பு 65% ஆக உயர்த்த திட்டமிடப்பட்டு நாள் ஒன்றுக்கு பால் கொள்முதலை 50 லட்சம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவையில் பால்வளத் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை மாதவரம் பகுதியில் புதிய பால் பண்ணை ஆனது மார்ச் 2026 ல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்” என்று தகவல் வெளியாகியுள்ளது.

























