
Jio நிறுவனத்தால் ஒன்றிய அரசுக்கு ஏற்பட்ட இழப்பு.. CAG அமைப்பு வெளியிட்ட முக்கிய தகவல்.. அதிர்ச்சியில் மக்கள்..
ரிலையன்ஸ் ஜியோ என்பது ஒரு தொலைத்தொடர்பு நிறுவனமாகும். இந்த நிறுவனமானது முகேஷ் அம்பானியின் கட்டுப்பாட்டில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) நிறுவனத்திற்கு சொந்தமானது. மேலும், இந்தியாவில் 4G மற்றும் 5G சேவைகள், பிராட்பேண்ட் போன்ற தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கி வருகிறது. இத்துடன் பொழுதுபோக்கு, ஷாப்பிங் மற்றும் பணம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் சேவைகளையும் மக்களுக்கு அளிக்கிறது.
இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோவின் உள்கட்டமைப்பு பற்றிய முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, “மே 2014 – மே 2024 வரை என 10 ஆண்டுகளாக தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு பகிர்வுக்கான தொகையை JIO நிறுவனத்திடம் இருந்து BSNL வசூலிக்காததால் ஒன்றிய அரசுக்கு ரூ.1,757 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்தியாவின் கன்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் (CAG) அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது”.

























