
இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு…மாதம் ரூ. 1,40,000 வரை சம்பளம்…விண்ணப்பிக்கும் முறை இதோ
இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாக உள்ள மூன்று வகையான ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு, தகுதியான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், இதற்கான முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். எனவே, இதை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
AAI காலிப்பணியிடங்கள்:
AAI வெளியிட்ட அறிவிப்பில் 83 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (தீயணைப்பு சேவைகள்) – 13 பதவிகள்
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (மனித வளம்) – 66 பதவிகள்
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (அதிகாரப்பூர்வ மொழி) – 4 பதவிகள்
AAI கல்வித்தகுதி:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (தீயணைப்பு சேவைகள்):
அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் தீயணைப்பு பொறியியல் / இயந்திர பொறியியல் / ஆட்டோமொபைல் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (மனித வளம்):
அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் HRM / HRD / PM & IR / MBA பட்டப்படிப்பு அல்லது அதற்கு சமமான இரண்டு வருட கால பட்டப்படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (அதிகாரப்பூர்வ மொழி):
அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் அல்லது இந்தியில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
AAI வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 27 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
IIT மெட்ராஸில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு…4 லட்சம் வரை ஆண்டு ஊதியம்…உடனே அப்ளை பண்ணுங்க
AAI ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (தீயணைப்பு சேவைகள்):
மாதத்திற்கு ரூ. 40,000 முதல் ரூ. 1,40,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (மனித வளம்):
மாதத்திற்கு ரூ. 40,000 முதல் ரூ. 1,40,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (அதிகாரப்பூர்வ மொழி):
மாதத்திற்கு ரூ. 40,000 முதல் ரூ. 1,40,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
AAI தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான தேர்வு/ உடல் அளவீட்டு தேர்வு/ விண்ணப்ப சரிபார்ப்பு / ஓட்டுநர் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
AAI விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.aai.aero/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்றுடன் (18.03.2025) முடிவடைவதால், தகுதியான விண்ணப்பத்தாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

























