ஆதாரில் உங்களுடைய புகைப்படத்தை மாற்ற வேண்டுமா? எளிய வழிமுறைகள் இதோ!

0
ஆதாரில் உங்களுடைய புகைப்படத்தை மாற்ற வேண்டுமா? எளிய வழிமுறைகள் இதோ!
ஆதாரில் உங்களுடைய புகைப்படத்தை மாற்ற வேண்டுமா? எளிய வழிமுறைகள் இதோ!
ஆதாரில் உங்களுடைய புகைப்படத்தை மாற்ற வேண்டுமா? எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் ஆதார் அட்டை முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக இருக்கும் நிலையில், அதில் உங்களுடைய புகைப்படத்தை எப்படி மாற்றுவது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆதார் அட்டை:

இந்தியாவில் அடிப்படை ஆவணங்களில் ஒன்றான ஆதார் அட்டை பல முக்கிய சேவைகளை பெற கட்டாயமானதாக இருக்கிறது. அதனால் ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் சரியாக இருப்பது கட்டாயம் ஆகும். குறிப்பாக ஆதார் அட்டையில் உள்ள உங்களுடைய முகம் தெளிவாக இருக்க வேண்டும். அது சரியாக இல்லாமல் இருந்தால் அதனை மாற்றுவது குடிமக்களின் முக்கிய கடமையாகும். அந்த வகையில் ஆதார் ஆணையம் ஆதார் அட்டையில் உள்ள புகைப்படங்களை மாற்ற அனுமதி வழங்கி இருக்கிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

அதாவது ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து புகைப்படங்களை மாற்றுவதற்கான கட்டணத்தை செலுத்தினால் உங்களுடைய புகைப்படம் மாற்றம் செய்யப்படும். அதற்கான எளிய வழிமுறைகள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்.

‘இவர்களுக்கு’ ஓய்வூதியத்தொகை மிகவும் குறைவு – வெளியான ரிப்போர்ட்!

  1. முதலில் UIDAI இன் https://uidai.gov.in/my-aadhaar/get-aadhaar.html அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிட வேண்டும்.
  2. பின் போர்ட்டலில் இருந்து ஆதார் பதிவு படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  3. அந்த படிவத்தில் தேவையான விவரங்களை உள்ளிட வேண்டும்.
  4. ஆனால் முழு படிவத்தை நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை.
  5. பின் புகைப்படத்தை மாற்ற தேவையான பிரிவை மட்டும் நிரப்ப வேண்டும்.
  6. அந்த படிவத்தை அருகே உள்ள ஆதார் பதிவு மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
  7. இறுதியாக ஆதார் நிர்வாகம் உங்களுடைய விவரங்களையும் பயோமெட்ரிக் போன்றவற்றையும் சார்பார்ப்பார்.
  8. அதன் பின் அவர் புகைப்படத்தை எடுப்பார்.
  9. புகைப்படத்தை மாற்றும் சேவைக்கு ரூ.100 + GST செலுத்த வேண்டும்.
  10. பின் புதுப்பிப்பு கோரிக்கை எண்ணுடன் (URN) ஒப்புகை சீட்டு வழங்கப்படும்.
  11. UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நிலையைச் சரிபார்க்க URN ஐப் பயன்படுத்தலாம்.

    Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!