‘இவர்களுக்கு’ ஓய்வூதியத்தொகை மிகவும் குறைவு – வெளியான ரிப்போர்ட்!

0
'இவர்களுக்கு' ஓய்வூதியத்தொகை மிகவும் குறைவு - வெளியான ரிப்போர்ட்!
'இவர்களுக்கு' ஓய்வூதியத்தொகை மிகவும் குறைவு - வெளியான ரிப்போர்ட்!
‘இவர்களுக்கு’ ஓய்வூதியத்தொகை மிகவும் குறைவு – வெளியான ரிப்போர்ட்!

இந்தியாவில் தேசிய சமூக உதவி திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் மற்றும் நிதியுதவி வழங்குவதில் கடைசி 10 மாநிலங்களில் ஒடிசா மாநிலம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

ஓய்வூதியம்

இந்தியாவில் உள்ள முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள், விதவைகள் மற்றும் திருநங்கைகளுக்கு தேசிய சமூக உதவித் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் மற்றும் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் மற்றும் நிதியுதவி வழங்குவதில் கடைசி 10 மாநிலங்களில் ஒடிசா மாநிலம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. இந்த மாநிலத்தில் வயது மற்றும் வகை போன்ற காரணிகளின் அடிப்படையில் பங்கு ரூ.200 முதல் ரூ.400 வரை மட்டுமே கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்களும் ஆசிரியராகலாம்.. விரைவில் TNTET தேர்வுக்கான அறிவிப்பு!

இது குறித்து ஊரக வளர்ச்சி அமைச்சகத்திடம் உள்ள தரவுகளின் படி, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ. 2750 மற்றும் ரூ.3000 வழங்கப்படுகிறது. ஆனால் ஒடிசாவில் அவர்களுக்கு ரூ.500 முதல் ரூ.700 வரை வழங்கப்படுகிறது. ஆந்திரா மட்டுமின்றி, தமிழ்நாடு, தெலுங்கானா, மேற்கு வங்கம், அருணாச்சல பிரதேசம், குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழங்கும் ஓய்வூதியத் தொகையை விட இரண்டு முதல் நான்கு மடங்கு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!