பஸ்ஸில் பயணிக்க இனி சில்லறை தேவையில்லை – புதிய வசதி அறிமுகம்!

0
பஸ்ஸில் பயணிக்க இனி சில்லறை தேவையில்லை - புதிய வசதி அறிமுகம்!
பஸ்ஸில் பயணிக்க இனி சில்லறை தேவையில்லை - புதிய வசதி அறிமுகம்!
பஸ்ஸில் பயணிக்க இனி சில்லறை தேவையில்லை – புதிய வசதி அறிமுகம்!

பேருந்து போக்குவரத்து பயணத்தில் டிக்கெட் கட்டணத்தை டிஜிட்டல் முறையில் வசூலிப்பதற்கான புதிய அம்சம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

டிஜிட்டல் கட்டணம்:

மோடி அரசு திடீரென்று நாட்டில் உயர் மதிப்பு கொண்ட ரூபாய்களை பண மதிப்பிழப்பு செய்தது. அதனைத் தொடர்ந்து நேரடி பண பரிவர்த்தனைகளை கட்டுப்படுத்தும் வகையிலும், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையிலும் பல்வேறு அறிவிப்புகளையும் மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் சிறிய தொகை முதல் பெரிய தொகை வரை டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்வதையே விரும்புகின்றனர். தற்போது இந்த டிஜிட்டல் பரிவர்த்தனையை கேரள மாநில போக்குவரத்து கழகம் பேருந்து கட்டணத்தை வசூலிப்பதற்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

TN TET online classes!!!

இதற்கான நடவடிக்கைகள் தற்போது நடந்து வரும் நிலையில், 2024 ஜனவரி மாதம் முதல் இந்த புதிய வசதி கேரள பேருந்துகளில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் பேருந்து கட்டணத்தை google pay, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போன்றவற்றின் மூலமாக QR கோடை ஸ்கேன் செய்து செலுத்திக் கொள்ளலாம். டிஜிட்டல் டிக்கெட் பயணிகளின் அலைபேசிக்கு செல்லும். சில்லறை தட்டுப்பாடு காரணமாக அசௌகரியங்களை இதன் மூலம் தவிர்க்க முடியும். தற்போது கேரள மாநிலத்தின் முக்கிய நகரங்களில் இத்திட்டம் சோதனை முறையாக செயல்படுத்தப்பட உள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!