ரோஜா ரோஜா…உனக்காகவே வந்தே பாரத் ரயில் சேவை…!! “இது புதுசா இருக்கு”..!!
இந்திய ரயில்வே துறையை டிஜிட்டல் அமைப்பிற்கு மாற்றம் செய்ய பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும், அதி விரைவு மற்றும் சொகுசு ரயிலாக செயல்படுத்தப்பட்டு வரும் ” வந்தே பாரத்” ரயில் சேவை, நாட்டில் உள்ள பல்வேறு வழித்தடங்களிலும் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது “வந்தே பாரத் பார்சல் ரயில்” சேவை தொடங்குவது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை இந்தியன் ரயில்வே வெளியிட்டுள்ளது.
அதாவது, ரோஜா மாற்று செல்போன்களை விரைவாக கொண்டு செல்ல வந்தே பாரத் பார்சல் ரயில் சேவையை தொடங்குவதற்கான திட்டங்களை சமீபகாலமாக இந்தியன் ரயில்வே மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது, இந்த புதிய பார்சல் ரயிலுக்கான வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.



























