திருவண்ணாமலையேற பக்தர்களுக்கு தடை..!! ” வனத்துறை பகிர் அறிவிப்பு”..காரணம் இதுதானா”..!!
இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான “கார்த்திகை தீபம்” மக்களால் வெகு விமர்சையாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், அந்நாளில் வீட்டு வாசற்படிகளில் விளக்கேற்றி இறைவனை வழிபடுவதோடு, சிலர் பிரசித்தி பெற்ற கோவிலுக்கு சென்று பண்டிகையை கொண்டாடுவதும் உண்டு. அந்த வகையில், திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் ஆண்டுதோறும் ஏற்றப்படும் மகா தீபம், கடந்த டிசம்பர் 4ம் தேதியன்று கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில், டிசம்பர் 13 தேதி வரை பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
ரோஜா ரோஜா…உனக்காகவே வந்தே பாரத் ரயில் சேவை…!! “இது புதுசா இருக்கு”..!!
அதன்படி, அண்ணாமலையாரை தரிசிக்க லட்சக்கணக்கான மக்கள் வருகை தந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது அவர்கள் மலை ஏறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, பக்தர்கள் செல்லும் பெரும் பாதையில் 800 மீட்டர் அளவிற்கு மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், மலையேற பக்தர்கள் அனுமதிக்க வேண்டாம் என வனத்துறை எச்சரித்துள்ளது. மேலும், கொப்பரை பாதையில் 100 மீட்டர் மண் சரிவு, பாறைகள் உருண்டு விழும் அபாயம் போன்ற இயற்கை சீற்றங்கள் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



























