சின்ன முதலீடுக்கு பெரிய லாபம் வேண்டுமா? உடனே இதை கவனிங்க!
முதலீடு செய்வதன் மூலம் முக்கியமான நேரத்தில் தேவைப்படும் பெரும் தொகை கடன் இல்லாமல் பெற முடியும். குறிப்பாக குழந்தையின் திருமணம், கல்வி செலவுகள் போன்ற பல தேவைகளுக்கு முதலீடு செய்து வைப்பது ஒரு சிறந்த செயல் ஆகும். அதேபோல் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம் என்பது ஒரு சிறந்த திட்டமாகும். PPF திட்டத்தின் முதிர்வு காலம் அது தொடங்கப்பட்ட ஆண்டிலிருந்து 15 ஆண்டுகளாகும்.PPF திட்டத்துக்கான வட்டி உங்கள் PPF கணக்கில் மாதத்தின் 5-வது நாளிலிருந்து மாதத்தின் இறுதி நாட்கள் வரையில் இருக்கும் குறைந்த பேலன்ஸின் அடிப்படையில் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.
அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்? உங்களுக்கு இது தெரிஞ்சுருக்க வாய்ப்பே இல்ல!
PPF திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.500 முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக ஒரு நிதியாண்டுக்கு ரூ.1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும். 7.1% வட்டி விகிதத்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு 22,50,000 ரூபாய் முதலீடு செய்திருப்பார். அப்படியானால் 15 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய மொத்த கார்ப்பஸ் 40,68,209 ரூபாயாக அதிகரித்திருக்கும். இதில் வட்டி மட்டும் 18,18,209 ரூபாய் ஆகும். இத்த்திட்டத்தில் கூடுதலாக, சம்பாதித்த வட்டி மற்றும் முதிர்வுத் தொகைக்கு வரி இல்லை.

























