
நகை பிரியர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.. தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் சரிவு.. இன்றைய விலை என்ன தெரியுமா..??
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் தங்கத்தின் விலையானது உயர்வதும், குறைவதுமாக சாமானிய மக்களுக்கு ஆட்டம் காட்டி வருகிறது. மேலும், உலக நாடுகள் இடையே நிலவி வரும் போர் காரணமாக வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வந்த தங்கம் விலை தற்போது சற்று குறைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பொதுமக்கள் கவனத்திற்கு.. நாளை (15-05-2025) பவர்கட் செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் இதோ..!!
அதாவது, தமிழகத்தில் நேற்று (13-05-2025) தங்கத்தின் விலையானது ஒரு கிராமுக்கு ரூ.8,855 ஆகவும், ஒரு சவரன் ரூ.70,840 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, “இன்று (14-05-2025) தங்கத்தின் விலையானது கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,805-க்கும், சவரனுக்கு ரூ. 400 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.70,440-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி விலையானது மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.109-க்கும், ஒரு கிலோ ரூ.1,09,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது”.

























