
பஹல்கமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல்.. நடுநிலையான விசாரணைக்கு தயார்.. பாகிஸ்தான் பிரதமர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த நிகழ்வை பல்வேறு அரசியல் தலைவர்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும் கண்டித்து வருகின்றனர். இதை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய பிரதமர் மோடி “இதன் பின்னணியில் இருப்பவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது” என உறுதியளித்துள்ளார்.
வலுக்கட்டாய கடன் வசூலில் ஈடுபட்டால் சிறை தண்டனை.. துணை முதல்வர் தாக்கல் செய்த புதிய மசோதா..!!
இந்நிலையில் அபோதாபாத்தில் உள்ள ராணுவ அகாடமியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப், “சமீபத்தில் பஹல்காமில் நடைபெற்ற துயர சம்பவம் பழி கூறும் போக்கிற்கு மற்றொரு எடுத்துக்காட்டாகும். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பொறுப்பு மிக்க நாடாக, நடுநிலையான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது” என தெரிவித்தார்.

























