வலுக்கட்டாய கடன் வசூலில் ஈடுபட்டால் சிறை தண்டனை.. துணை முதல்வர் தாக்கல் செய்த புதிய மசோதா..!!

0
??????????? ???? ??????? ?????????? ???? ??????.. ???? ???????? ??????? ????? ????? ?????..!!
வலுக்கட்டாய கடன் வசூலில் ஈடுபட்டால் சிறை தண்டனை.. துணை முதல்வர் தாக்கல் செய்த புதிய மசோதா..!!

வலுக்கட்டாய கடன் வசூலில் ஈடுபட்டால் சிறை தண்டனை.. துணை முதல்வர் தாக்கல் செய்த புதிய மசோதா..!!

மக்கள் தங்கள் எதிர்பாராத தேவைகளை நிர்வகிக்க நிதி நிறுவனங்களிடம் கடன் பெறுகின்றன. மேலும், தனிநபர் மற்றும் சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்டவற்றிற்கு கடன் வழங்கும் நிறுவனங்களின் வலுக்கட்டாய வசூலிப்பு முறைகளால் பொதுமக்கள் மிகுந்த இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். இதை தடுக்கும் வகையில் புதிய சட்டத் திருத்த மசோதாவை சட்டசபையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (26-04-2025) தாக்கல் செய்தார்.

TNPSC Tamil Ilakkanam Serthu Eluthuthal Study Materials – Free PDF Download

இந்த சட்டத்திருத்த மசோதாவின் படி “கடன் வழங்கிய நிறுவனம் கடன் பெற்றவரோ அல்லது அவரது குடும்பத்தினரையோ வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தவோ, மிரட்டவோ, பின் தொடரவோ மற்றும்  அவர்களது சொத்துக்களை பறிக்கவோ கூடாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. “அதை மீறி வலுக்கட்டாயமாக வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது. மேலும், வலுக்கட்டாய நடவடிக்கைகளால் “கடன் பெறுபவர் அல்லது அவர் தொடர்புடைய எவரேனும் தற்கொலை செய்து கொண்டால் கடன் கொடுத்த நிறுவனம் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படும் எனவும், தண்டனைக்குரிய குற்றங்களில் கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் வெளிவர முடியாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!