
“ரஷ்யாவில் உள்ள உக்ரேனியர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்”.. அதிபர் புதின் விதித்த அதிரடி உத்தரவு..
உக்ரைன் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியது. அதன் விளைவாக சமீபத்திய ஆண்டுகளில், ரஷ்யாவில் வசிக்கும் உக்ரேனியர்களை ரஷ்ய குடியுரிமையை ஏற்குமாறு அதிகாரிகள் அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்பட்டது. மேலும், கடந்த ஆண்டு உக்ரேனியர்களுக்கான ரஷ்ய பாஸ்போர்ட்டுகளை பெருமளவில் வழங்குவதை ரஷ்ய அரசாங்கம் கிட்டத்தட்ட முடித்துவிட்டதாக புதின் தெரிவித்தார். இந்நிலையில் இந்த குடியுரிமை குறித்து முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
திருச்சியில் 7 தளங்களுடன் அமையவுள்ள கலைஞர் நூலகம்.. தமிழக முதல்வர் இன்று அடிக்கல் நாட்டினார்..
அதாவது, “ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ரஷ்யாவில் வசிக்கும் உக்ரைனியர்கள் செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் தங்கள் குடியேற்ற நிலையை சட்டப்பூர்வமாக பெற்றிருக்க வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற நேரிடும் என்று உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு ரஷ்யாவால் பகுதியளவு ஆக்கிரமிக்கப்பட்ட டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன் மற்றும் சபோரிஜியாவைச் சேர்ந்த உக்ரேனிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கும் பொருந்























