
Champions Trophy 2025 : “ஓய்வுக்கு வாய்ப்பில்லை”…!! வெற்றிக்கு பின் ஓய்வு குறித்து மவுனம் கலைத்த விராட் மற்றும் ரோஹித்..!!
சாம்பியன் ட்ரோபி 2025 இறுதி போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இப்போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்ட இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஏழாவது முறையாக ICC ட்ரோபியை இந்திய அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்போட்டி முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த ரோஹித் மற்றும் விராட் கூறிய கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக மாறியுள்ளது.
அதாவது, கடந்த சில நாட்களாகவே இந்திய அணியின் முக்கிய புள்ளியாக கருதப்படும் விராட்கோலி மற்றும் ரோஹித் சர்மா ODI போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவதாக தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த ரோஹித் சர்மா “ODI போட்டிகளில் இருந்து இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்றும், ஓய்வு என்ற கேள்விக்கே இடமில்லை” என்று கூறினார். அதன் பின் பேசிய விராட் கோலி ” நான் அணியை விட்டு செல்லும் போது அணியை நல்ல நிலைமையில் விட்டு செல்ல வேண்டும் என விரும்புகிறேன்… இப்போது உலகை எதிர்த்து விளையாட அடுத்த 8 வருடங்களுக்கு எங்கள் அணி தயாராக உள்ளது ” என்று கூறினார். இதன் மூலம் இவர்கள் இன்னும் சில வருடங்கள் அணியில் நீடிப்பார் என தெரிய வந்ததால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.























