
உங்களுக்கு 8 கிராம் தங்கம், ரூ. 25,000 ரொக்கத்துடன் கூடிய திருமண பரிசு வேணுமா…?? அப்போ இந்த திட்டத்தில் மறக்காம விண்ணப்பிச்சிருங்க..!!!
தமிழ்நாட்டில் பெண்களின் கல்வியை ஊக்குவிப்பதற்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவ்வாறான, “மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் நினைவு திருமண உதவி திட்டம்” குறித்து இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். அதாவது, இத்திட்டத்தின் கீழ் பெற்றோர் இல்லாத 10 ஆம் வகுப்பு படித்த பெண்களுக்கு திருமணத்தின் போது ரூ. 25,000 நிதி உதவி மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. மேலும், பெண்களுக்கு அடிப்படை கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக, தொடங்கப்பட்ட ஐந்து திருமண உதவி திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.
ATM கார்டு இல்லாமல் UPI பின் மாற்ற முடியுமா…? NPCI வெளியிட்ட முக்கிய தகவல்…!!
மேலும், விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் ரூ. 72,000 க்கு மிகாமலும், பெண்கள் சட்டப்பூர்வ திருமண வயதை அதாவது, 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். குறிப்பாக, ஒரு குடும்பத்தில் இருந்து ஒரு பெண் மட்டுமே இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும். மேலும், இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் தங்களுடைய வருமான சான்றிதழ், திருமண அழைப்பிதழ், 10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஆகிய சான்றிதழ்களுடன் அருகில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

























