
மக்களின் கவனத்திற்கு.. தமிழகத்தில் மார்ச் மாதம் முழுவதும் மின்தடை கிடையாது .. மின்வாரியம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு..
தமிழக மின்சார வாரியத்தின் சார்பில் தடையில்லா மின்சார விநியோகமானது தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், துணை மின் நிலையங்களில் மாதம் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் குறித்த விவரங்களை மின்வாரியம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டு மக்களை எச்சரித்து வருகிறது.
அந்தவகையில் , தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் நடைபெறுவதால் மாணவர்களின் நலன் கருதி தமிழக மின்வாரியம் ஆனது மார்ச் மாதம் முழுவதும் மின்தடை எதுவும் நிகழாது என்று தெரிவித்துள்ளது. எனவே, இதனால் வழக்கமாக வெளியிடப்படும் மின்தடை எச்சரிக்கை அட்டவணையும் வெளியிடப்படவில்லை என கூறப்படுகிறது.























