பிரபல “AIR INDIA” நிறுவனத்திற்கு அபராதம் விதிப்பு..!! ” காரணம் இது தானா”..!!
வசதி படைத்த பெரும்பாலானோர் தங்களின் நீண்ட தூர பயணத்திற்கு விமானப் பயணத்தை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும், உலகம் முழுவதும் பல்வேறு பல விமான நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், இந்தியாவின் புகழ்பெற்ற “AIR INDIA” நிறுவனத்தில் தகுதி பெறாத பயிற்சி விமானியை வைத்து விமானத்தை இயக்கியதாக வெளிவந்த புகாரையொட்டி, அந்நிறுவனத்திற்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அபராதம் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஓட்டுனர்களுக்கு மானியம்.. பெண்களுக்கான புதிய திட்டம்.. அரசு அறிவிப்பு!!
அபராதம் விதித்த காரணம்;
மும்பையில் இருந்து ரியாத்துக்கு செல்லும் “AIR INDIA” விமானத்தில் தகுதி பெறாத பயிற்சி விமானி, விமானத்தை இயக்கியுள்ளார். இதனை கண்டறிந்த சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம், விதிகளை மீறி செயல்பட்டதாகவும் மற்றும் ஒழுங்குமுறை விதிகளில் முரண்பாடு போன்றவை கண்டறியப்பட்டதாலும் “AIR INDIA” நிறுவனத்திற்கு ரூ.90 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், “AIR INDIA” நிறுவனத்தின் செயல்பாட்டு இயக்குநருக்கு ரூ.6 லட்சம் மற்றும் பயிற்சி இயக்குநருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


























