ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!!! “இனி OVER TIMING கவலை இல்லை”..!!! அரசு உத்தரவு..!!
தற்போதைய காலகட்டத்தில் பணிகளுக்கு செல்லும் ஊழியர்களின் வேலை நேரம் முடிந்த பின்னும், ஒரு சில நிறுவனங்கள் பணியை முடித்து விட்டு செல்ல வேண்டும் என்று கட்டயப்படுத்துகின்றன . இதனால், ஊழியர்கள் தங்களின் ஓய்வு நேரங்களில் ஒய்வு எடுக்க முடியாமல் கடும் மன உளைச்சலுக்கு தள்ளப்படுகின்றனர். அந்த வகையில், இது போன்ற சூழல் தங்களது ஊழியர்களுக்கு ஏற்பட கூடாது என்ற நோக்கில், ஆஸ்திரேலிய அரசு புதிய சட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளது.
தமிழகத்தில் ஓட்டுனர்களுக்கு மானியம்.. பெண்களுக்கான புதிய திட்டம்.. அரசு அறிவிப்பு!!
புதிய சட்டம்;
ஆஸ்திரேலியாவில் இருக்கும் அனைத்து துறைகளிலும் பணியாற்றி வரும் ஊழியர்கள், தங்களின் வேலை நேரம் முடிந்து வீடு திரும்பிய பின், அலுவலகத்தில் இருந்து வரும் கால்ஸ், மெசேஜ் மற்றும் மெயில் போன்றவற்றை நிராகரிக்கும் உரிமை சட்டம் வரும் ஆகஸ்ட் 26-ஆம் தேதியில் இருந்து ஆஸ்திரேலிய அரசு அமலுக்கு கொண்டு வருகிறது. குறிப்பாக, இது ஏற்கனவே பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


























