Infosys நிறுவன ஊழியர்களுக்கு சம்பள உயர்வு & பதவி உயர்வு? வெளியான ஹாப்பி நியூஸ்!
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் (Infosys) தனது ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, போனஸ், உள்ளிட்ட சலுகைகளை வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிறப்பாக செயல்பட்ட ஊழியர்களுக்கு, சிறந்த பதவிகள் வழங்கவும் இன்ஃபோசிஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சம்பள உயர்வு :
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பி விட்டது. இந்நிலையில், ஐடி ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இன்ஃபோசிஸ், கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் சம்பள உயர்வு, போனஸ் உள்ளிட்ட சலுகைகளை அறிவித்துள்ளன. அந்த வகையில் இன்ஃபோசிஸ் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சிறப்பாக செயல்பட்ட ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கவும், போனஸ் வழங்கவும் இன்ஃபோசிஸ் திட்டமிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் FY23 இன் முதல் காலாண்டில், நிறுவனம் 21,171 பேரை பணியமர்த்தியுள்ளது, கடந்த காலாண்டில் 3,14,015 ஆக இருந்த நிறுவனத்தின் பணியாளர்களின் எண்ணிக்கையை 3,35,186 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து 2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டில் 21.4 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து, இன்ஃபோசிஸ் ஒரு வலுவான செயல்திறனைப் பதிவு செய்துள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனம் ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் 5,360 கோடி ரூபாய் ஒருங்கிணைக்கப்பட்ட நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது.
ICF சென்னை 876 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க ஜூலை 26 கடைசி நாள் !
மேலும் இன்ஃபோசிஸின் ஒருங்கிணைந்த வருவாய் ரூ. 34,470 கோடியாக உள்ளது, இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் இருந்த ரூ.27,896 கோடியில் இருந்து 23.6 சதவீதம் அதிகரித்து உள்ளது. மேலும் ஊழியர்களை வெளியேறுவதை தடுக்கும் வகையில் இந்த சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகிறது. ஊழியர்களுக்கு புதிய வாய்ப்புகளும், திறன் பயிற்சியும் வழங்கப்படுவதை உறுதி செய்யும்படி மேனேஜர்களுக்கு இன்ஃபோசிஸ் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், ஏராளமான ஃப்ரஷர்களை வேலைக்கு எடுக்கவும் இன்ஃபோசிஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் 85,000 ஃப்ரஷர்களை இன்ஃபோசிஸ் பணியில் அமர்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.