ICF சென்னை 876 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க ஜூலை 26 கடைசி நாள் !
ஒருங்கிணைந்த கோச் தொழிற்சாலை (ICF) சென்னை ஆனது Apprentice பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இந்த பணிக்கு என 800 க்கு மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ICF சென்னை வேலைவாய்ப்பு விவரங்கள்:
ஐசிஎஃப் சென்னையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் 10வது மற்றும் 12வது முடித்திருக்க வேண்டும். ஒருங்கிணைந்த பயிற்சியாளர் தொழிற்சாலை சென்னை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 26-07-2022 தேதியின்படி குறைந்தபட்ச வயது 15 மற்றும் அதிகபட்சம் 24 வயதுடையவராக இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
Exams Daily Mobile App Download
Carpenter – 87, Electrician – 188, Fitter – 208, Machinist – 63, Painter – 83, Welder – 245, Pasaa – 2 பணியிடங்கள் என மொத்தம் 876 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு Fresher’s விண்ணப்பதார்களும் விண்ணப்பிக்கலாம். மற்ற விண்ணப்பதார்களுக்கு ரூ. 100/- மற்றும் SC/ ST/ PwBD/ பெண்கள் விண்ணப்பதார்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ. 6,000 – 7,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியனவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி ஆன்லைன் இணைய முகவரி மூலம் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.