கொரோனா வைரஸை செயலிழக்க செய்யும் புதிய அம்சம் – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
கொரோனா வைரஸை ஒழிக்க பல மாதங்களாகவே ஆராய்ச்சியாளர்கள் புதிய மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி வருகின்றனர். பல வருட ஆராய்ச்சியின் பலனாக தற்போது கொரோனா வைரஸை செயலிழக்க செய்யும் புதிய அமிலம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
கொரோனா வைரஸ்
உலகம் முழுவதும் அடுத்தடுத்து கொரோனா பரவல் அதிகரித்தபடியே தான் இருக்கிறது. தற்போது மட்டுமே கொரோனா மூன்று அலைகளை தாண்டி நான்காம் அலை பரவி கொண்டிருக்கிறது. என்ன தான் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசியை கண்டுபிடித்தாலும் கொரோனாவை ஒழிக்கவே முடியவில்லை. இதனால், கொரோனாவை ஒழிக்க தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் மருந்து கண்டுபிடித்தபடியே தான் இருக்கின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸை செயலிழக்க செய்யும் புதிய மருந்து ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
Exams Daily Mobile App Download
அதாவது, இந்திய அறிவியல் கல்விக்கழக விஞ்ஞானிகள் மற்றும் சிஎஸ்ஐஆர் – நுண்ணுயிரியல் தொழில்நுட்ப கல்வி கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து புதிய வகை செயற்கை அமினோ அமிலத்தை உருவாக்கியுள்ளனர். அதாவது, இந்த அமினோ அமிலம் கொரோனா (சார்ஸ்-கொவ்-2) வைரசின் வெளிப்பகுதியில் உள்ள புரதத்தோடு இணைந்து அதன் செயலாக்கத்தை தடுக்கிறது. மேலும், இந்த அமினோ அமிலம் கொரோனா (சார்ஸ்-கொவ்-2) வைரஸ் மனித உடலில் உள்ள செல்களில் நுழைவதை தடுக்கிறது.
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனாவால் மீண்டும் ஊரடங்கு – அமைச்சர் விளக்கம்!
இது மட்டுமல்லாமல் கொரோனா வைரஸ் துகள்களை உடலுக்குள் ஒன்றாக திரட்டி அதன் வீரியத்தை குறைகிறது. மேலும், இந்த அமினோ அமிலம் கொரோனா வைரஸின் புரதம் – புரதத்திற்கு இடையேயான பிணைப்பை தடுக்கிறது. இந்த பிணைப்பானது கிரையோ- எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப்பி மற்றும் இதர உயிரித்தன்மை மாதிரிகள் மூலமாக மேலும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இந்த அமினோ அமிலத்தை சோதனைக் கூடத்தில் உள்ள பாலூட்டிகளின் செல்களில் செலுத்தப்பட்டு பாதுகாப்பானது தான் என கண்டறியப்பட்டுள்ளது.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்