ஆதார் அட்டை பயனர்கள் கவனத்திற்கு – இதை செய்ய வேண்டாம்? முக்கிய எச்சரிக்கை!

0
ஆதார் அட்டை பயனர்கள் கவனத்திற்கு - இதை செய்ய வேண்டாம்? முக்கிய எச்சரிக்கை!
ஆதார் அட்டை பயனர்கள் கவனத்திற்கு - இதை செய்ய வேண்டாம்? முக்கிய ஆதார் அட்டை பயனர்கள் கவனத்திற்கு - இதை செய்ய வேண்டாம்? முக்கிய எச்சரிக்கை!எச்சரிக்கை!
ஆதார் அட்டை பயனர்கள் கவனத்திற்கு – இதை செய்ய வேண்டாம்? முக்கிய எச்சரிக்கை!

இந்திய குடிமகன்களின் தனித்துவ அடையாள ஆவணமான ஆதார் அட்டைகள் தொடர்பான சில எச்சரிப்புகளை அரசாங்கம் தற்போது வெளியிட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களையும் இப்பதிவில் விரிவாக காணலாம்.

முக்கிய எச்சரிக்கை

மத்திய அரசாங்கம் வழங்கியுள்ள முக்கிய அடையாள ஆவணமான ஆதார் அட்டைகள் இப்போது பல்வேறு சேவைகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆதார் கார்டுகள் வாழ்நாள் முழுவதுக்கும் செல்லுபடியாகும் ஒரு ஆவணமாக இருப்பதால் அதில் பயனரின் பெயர், வயது, முகவரி, புகைப்படம் உள்ளிட்ட பல முக்கியமான தகவல்கள் இடம் பிடித்திருக்கும். மேலும், இந்த ஆதார் அட்டைகள் பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் பயன்பாட்டில் இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஒட்டுமொத்த இந்தியர்களின் டிஜிட்டல் அடையாள அட்டையாக உருமாறியுள்ள இந்த ஆதார் அட்டைகளை கவனமாக பாதுகாப்பது முக்கியமான ஒன்று ஆகும்.

Exams Daily Mobile App Download

அதாவது, ஆதார் அட்டையை முறையாக பயன்படுத்துவது, யாருக்கு பகிர்வது என்பதில் பயனர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதே போல ஆதார் அட்டைகளை பதிவிறக்கம் செய்யும் போது சொந்த கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பை பயன்படுத்துவது பல்வேறு சிக்கல்களை தவிர்க்கும். அதிலும், இ-ஆதார் அட்டையை https://eaadhaar.uidai.gov.in/genricDownloadAadhaar என்ற அதிகாரப்பூர்வ UIDAI இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்வதை உறுதிப்படுத்தி கொள்ளவும். மேலும், உங்களது ஆதார் பயோமெட்ரிக்ஸை வேறு யாரேனும் தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க Aadhaar Lock அல்லது Unlock என்ற ஆப்ஷனை பயன்படுத்தலாம்.

கொரோனா வைரஸை செயலிழக்க செய்யும் புதிய அம்சம் – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

இந்த வசதியை விர்ச்சுவல் ஐடி மூலம் mAadhaar செயலியில் பெறலாம். தொடர்ந்து ஆதார் அங்கீகார வரலாற்றை அவ்வப்போது சரிபார்ப்பது அவசியமானது. இதில் ஏதேனும் ஒரு அங்கீகாரம் தவறாக இருந்தால் 1947 என்கிற  எண் அல்லது [email protected] மூலமாக  புகார் அனுப்பலாம். உங்களது ஆதார் தொடர்பான கடவுச்சொல்லை கவனமாக கையாள வேண்டும். இப்போது போலியான கார்டுகள் அதிகளவு வலம் வருவதால் ஆதார் அட்டைகளை ஒருவரிடம் கொடுக்கும் போதும் அதனை வாங்கும் போதும் சரிபார்க்க வேண்டியது அவசியம் ஆகும். கடைசியாக ஆதார் அட்டைகள் தொடர்பாக உங்களுக்கு வரும் OTP மற்றும் தனிப்பட்ட விவரங்களை யாருடனும் பகிரக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!