வருங்கால மனைவியுடன் பொது இடத்தில் CWC பிரபலம் புகழ் – வைரலாகும் வீடியோ!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான புகழ் சில வாரங்களுக்கு முன்புதான் தனது காதலியை ரசிகர்களின் மத்தியில் அறிமுகம் செய்தார். தற்போது தனது காதலியை ஒரு நொடி கூட பிரிய விடாமல் பார்த்துக்கொள்ளும்படியான வீடியோ வைரலாகி வருகிறது.
காதலியுடன் புகழ்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக கோடிக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்தவர் அதன் புகழ். ஆரம்பத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சாதாரணமாக கோமாளியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எண்ட்ரியாகியுள்ளார். தனது சாதாரணமான நகைச்சுவைத் திறனால் தற்போது கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆதரவையும் அன்பையும் பெற்றுள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாகவே புகழுக்கு எக்கச்சக்க பட வாய்ப்புகளும் குவிந்து கொண்டிருக்கிறது.
Exams Daily Mobile App Download
ஆனால், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஷூட்டிங் காரணமாக மாஸ்டர் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. அதற்குப் பிறகு வெளியான சில திரைப்படங்களிலும் புகழ் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்போதும் ஏகப்பட்ட திரைப்பட வாய்ப்புகளை கைக்குள் வைத்திருக்கிறார். ஏகப்பட்ட திரைப்பட வாய்ப்புகள் வந்ததன் காரணமாக குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் இருந்து ஆரம்பத்தில் விலகினார். ஆனால், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி ஷூட்டிங் இல்லாத நாட்களில் மட்டும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகிறார்.
வங்கி செல்லும் வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு – விடுமுறை குறித்த விவரம் வெளியீடு!
சில வாரங்களுக்கு முன்பாகவே புகழ் தனது காதலியை ரசிகர்களுக்கு மத்தியில் அறிமுகம் செய்தார். கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அறிவித்திருந்தார். புகழின் திருமணம் எப்போது என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அவ்வப்போது இருவரும் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்துமே சமூக வலைப்பக்கங்களில் வைரலாகி வருகிறது. தற்போது ஒரு பட விழாவிற்கு புகழ் தனது வருங்கால மனைவியையும் அழைத்து சென்றிருக்கிறார். அந்த விழாவின் போது தனது வருங்கால மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு கவனமாக அழைத்து செல்லும்படியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.