பாரதிக்காக சண்டையிடம் இரண்டு கண்ணம்மா – சீசன் 2 விரைவில் தொடக்கம்! ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் அதிரடியான கதையுடன் சென்று கொண்டிருக்கும் நிலையில், பாரதி கண்ணம்மா சீசன் 2 விரைவில் தொடங்க இருப்பதாகவும், அதில் பழைய கண்ணம்மா ரோஷினி மற்றும் புதிய கண்ணம்மா வினுஷா களமிறங்க இருப்பதாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியல் டாப் வரிசையில் இருக்கும் முன்னணி சீரியல் ஆகும். இந்த சீரியல் கதை பல மொழிகளில் வெற்றி கண்ட சீரியல்களின் கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கும் நிலையில், பாரதி கண்ணம்மா சேருவர்களா, லட்சுமி ஹேமாவிற்கு தனது அப்பா அம்மா யார் என்ற உண்மை தெரியவருமா என பல திருப்பங்களுடன் கதை சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமான பாரதியாக நடிகர் அருண் நடித்து வருகிறார்.
மேலும் 600 எபிசோடுகள் வரை கண்ணம்மாவாக நடிகை ரோஷினி நடித்து வந்தார். அதன் பின் தற்போது வினுஷா தேவி கண்ணம்மாவாக களமிறங்கி கலக்கி வருகிறார். சீரியல் 700 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வந்தாலும் சீரியல் கதை அடுத்த கட்டத்திற்கு செல்லவில்லை. இன்னும் பாரதி கண்ணம்மாவை வெறுப்பதும் லட்சுமி அப்பாவை தேடி அலைவதுமாக கதை சென்று கொண்டிருக்கிறது. அதனால் ரசிகர்கள் சற்று அதிருப்தி அடைந்து இருக்கின்றனர். மேலும் இதுவரை இல்லாத அளவில் TRPயில் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் விரைவில் முடிய இருப்பதாகவும் இரண்டாவது சீசன் விரைவில் தொடங்க இருப்பதாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் முன்னதாக கண்ணம்மாவாக நடித்த ரோஷினி மற்றும் தற்போது கண்ணம்மாவாக நடித்து வரும் வினுஷா தேவி ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். பாரதிக்காக இரண்டு கண்ணம்மாவும் சண்டை போடுவது போல ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது. ஆனால் இது வெறும் எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ தான் என்பதால் இந்த சீரியல் விரைவில் தொடங்கப்பட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.