BEL நிறுவனத்தில் ரூ.20,000/- ஊதியத்தில் வேலை ரெடி – விண்ணப்பிக்கலாம் வாங்க !
Medical Officer பணி இடங்களை நிரப்ப பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இங்கு மொத்தம் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த மத்திய அரசு பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் 06.04.2021 வரை வரவேற்கப்பட உள்ளன. எனவே, ஆர்வமுள்ளவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப் பட உள்ளன. அரசு/ மருத்துவ கவுன்சிலின் கட்டுப்பாட்டில் இயங்கும் மருத்துவ கல்லூரிகளில் M.B.B.S டிகிரி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது அதிகபட்சம் 65க்குள் இருக்க வேண்டும். தேர்ச்சி செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.20,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
ஒவ்வொரு நாளும் வேலை நேரம் 4 மணி நேரம் (காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை மற்றும் மாலை 02.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை) இருக்கும். 01.02.2021 தேதியின்படி குறைந்தபட்சம் 02 ஆண்டுகள் அனுபவும் உடையவர்க்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளதால், தகுதியானவர்கள் உடனே இந்த வாய்ப்பை தவறவிடாமல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
I want to the job
I was finished DGNM .pls inform any BHEL,ESI,JIPMER,vacancy.