முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச கார் சேவை – தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!!

0
முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச கார் சேவை - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!!
முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச கார் சேவை - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!!
முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச கார் சேவை – தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!!   

நாளை (ஏப்ரல் 6) வாக்குப்பதிவு நாளன்று முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக இலவச கார் சேவையை அறிமுகப்படுத்தி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இலவச கார் சேவை

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு செலுத்த வேண்டும் என பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக இலவச கார் சேவையை உபர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி சென்னை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களை சேர்ந்த முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த சேவைகள் வழங்கப்படவுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் இல்லத்திலிருந்து வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்து விட்டு வீடு திரும்புவதற்கு வசதியாக, உபர் நிறுவனம் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து இலவச கார் சேவையை வழங்கவுள்ளது.

தமிழகத்தில் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள் ஒத்திவைப்பு – தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு!!

அதன்படி சென்னை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் உள்ள வாக்காளர்களுக்கான இந்த இலவச கார் சேவையானது, குறைந்தபட்சம் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்டண அளவு 200 ரூபாய் வரை இருந்தால் 100 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் உபர் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். எனவே முதியோர், மாற்றுத்திறனாளிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது வாக்குகளை செலுத்தலாம்’ என கூறப்பட்டிருந்தது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!