வீட்டிற்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசம் – அரசு புதிய அறிவிப்பு !!
‘பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா’ திட்டத்தை மத்திய அரசு 2016 ஆம் ஆண்டு செயல்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ், ஏழை பெண்களுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு 300 ருபாய் சிலிண்டருக்காக வழங்கி வந்தது. இந்த திட்டமானது 2025, மார்ச் மாதம் வரை செயல்பட உள்ளது. இந்த மானியம் காரணமாக சிலிண்டர் விலை தற்போது 800 ருபாய் உள்ளது. இதற்காக அனைத்து பெண்களும் இந்த திட்டத்தில் இணைந்து சிலிண்டருக்கான மானியத்தை பெற்று வருகின்றனர்.
3 மாத திட்டத்தில் ஆஃபர்.. சுதந்திரதின சிறப்பு சலுகை.. ஜியோவின் அதிரடி அறிவிப்பு!!
இப்போது மத்திய அரசை போலவே மகாராஷ்டிரா அரசும் வரும் சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, பெண்களுக்கு சிலிண்டரில் சிறப்பு சலுகை வழங்க முடிவு செய்துள்ளது. ‘முக்ய மந்திரி லட்கி பஹின் யோஜனா’ என்று இந்த திட்டத்திற்கு பெயர் வைத்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், பெண்களுக்கு மாதம் 1500 ருபாய் வழங்கப்படுகிறது. மேலும், வருடத்திற்கு 3 கேஸ் சிலிண்டர்களை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் எரிவாயு யார் பெயரில் உள்ளதோ அவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று அரசு சார்பில் கூறியுள்ளது. இதற்கான தொகை அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாகவே செலுத்தப்படும் என்று மகாராஷ்டிரா அரசு கூறியுள்ளது.


























