வானிலையை கணிக்கும் துல்லிய கருவியா..?இனி கவலை கொள்ள வேண்டாமா..?

0
வானிலையை கணிக்கும் துல்லிய கருவியா..?இனி கவலை கொள்ள வேண்டாமா..?

தற்போதைய காலகட்டத்தில் வானிலை ஆய்வு அறிக்கையை சரியாக கணிக்க முடியவில்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மீது சில புகார்கள் எழுந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் புவி வெப்பமயமாதலுக்கு பிறகு ஏற்படும் பருவநிலை மாற்றங்களில் , மழை காலத்தில் மழை பெய்யும் என்றும் வெயில் காலத்தில் வெயில் அடிக்கும் என்றும் உறுதியாக சொல்ல முடியவில்லை என்றும் கூறுகின்றனர்.

எடுத்துக்காட்டாக கேரளாவில் நடந்த வயநாடு நிலச்சரிவு.கடந்த சில நாட்களாகவே கேரளாவில் அதிக கனமழை பெய்து வந்த நிலையில்,கடந்த 30 ம் தேதி நடந்த நிலச்சரிவு பற்றி ஏன் முன்கூட்டியே வானிலை ஆய்வு மையத்தால் எந்த வித எச்சரிக்கையும் கணிக்க முடியவில்லை மற்றும் நிலச்சரிவு நடந்த அன்று கேரளாவில் சுமார் 57.2 சென்டி மீட்டர் மழை பெய்து உள்ளது ஆனால் வானிலை ஆய்வு மையம் என் முன்கூட்டியே ரெட் அலர்ட் கொடுக்கவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன.

தமிழகத்தில் நிலச்சரிவுக்கு வாய்ப்பா ?… இந்த பகுதி மக்களே உஷார் !!!!

இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ,கேரளா அரசாங்கத்திடம் ஏற்கனவே உரிய எச்சரிக்கை வானிலை ஆய்வு மையத்தால் வழங்கப்பட்டது என்று கூறினார் .அதற்கு கேரளாவின் முதலமைச்சர் பினராயி விஜயன் அப்படி எந்த ஒரு முன் எச்சரிக்கையும் எங்களுக்கு வரவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

இப்படி ஒருவரை ஒருவர் குறை சொல்லி எந்த ஒரு பயனும் இல்லை.இனி வரும் காலங்களில் ஆவது வானிலையை துல்லியமாக கணக்கிடும் கருவியை கண்டுபிடித்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் அதன் மூலம் பேரிடர் ஏற்படும் பகுதியை அறிந்து அங்கிருந்து மக்களை உடனே வெளியேற்றினால் இவ்வித பெரிய அழிவில் இருந்து மக்களை காப்பாற்ற முடியும் என்று கருதுகின்றனர்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!