IND vs SL 2024 : கடைசி ஒருநாள் போட்டியில் மழை குறுக்கிடுமா ? .. வானிலை அறிக்கை வெளியீடு!!
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று T20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் T20 தொடரை இந்தியா வென்று அசத்திய நிலையில், ஒருநாள் தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டி சமனில் முடிந்தது, அடுத்த ஆட்டத்தில் இலங்கை வென்றது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் கடைசி ஆட்டம் ஆர். பிரேமதாச ஸ்டேடியத்தில் நாளை பிற்பகல் 2.30 மணிக்கு நடக்கிறது.

இந்தியாவில் T20 உலக கோப்பை?? வெளியான முக்கிய அப்டேட்!!
இந்நிலையில் இந்த மைதானத்தின் வானிலை முன்னறிவிப்பின்படி போட்டியின் போது மழை குறுக்கிடாது என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஆர். பிரேமதாச மைதானத்தில், அதிகபட்ச வெப்பநிலை 29 C மற்றும் குறைந்தபட்சம் 26 C என்று வானிலை ஏற்ற இறக்கமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் 12 கிமீ / 11 மைல் வேகத்தில் காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நாளை முழுவதும் மழை அச்சுறுத்தல் இல்லை எனவும் தெரிகிறது. இதனால் நாளை தடையற்ற போட்டியை எதிர்பார்க்கலாம்.


























