3 மாத திட்டத்தில் ஆஃபர்.. சுதந்திரதின சிறப்பு சலுகை.. ஜியோவின் அதிரடி அறிவிப்பு!!
நாட்டின் நம்பர் ஒன் தொலைத்தொடர்பு நிறுவனமாக உள்ள ஜியோ அனைத்து மூலை முடுக்குகளிலும் நெட்வொர்க் வழங்கும் சிறந்த நிறுவனமாக விளங்குகிறது.. மேலும் அதிவேக 5G இணையத்தை நாட்டின் பல முக்கிய நகரங்களிலும் வழங்கி வருகிறது. மேலும் மக்களின் வசதிக்காக பண்டிகை காலம் சிறப்பு நாட்கள் மற்றும் முக்கிய தினங்களில் சிறப்பு சலுகைகளை பயனர்களுக்கு ஜியோ அளித்து வருகிறது.
தமிழகத்தில் நாளை (ஆக.7) மின்தடை.. போனுக்கு சார்ஜ் போட்டு ரெடியா வைங்க மக்களே!!

அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி அன்று நாட்டின் சுதந்திர தின விழா சிறப்பிக்கப்பட உள்ள நிலையில் அதனை முன்னிட்டு ஜியோ நிறுவனம் ஃப்ரீடம் ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி ஏர்ஃபைபர் சேவையின் கீழ் சேரும் புதிய வாடிக்கையாளர்களுக்கு 30% சதவீதம் தள்ளுபடி கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சலுகை வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை மட்டுமே உபயோகத்தில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


























