தமிழக அரசு ஊழியர்களுக்கு 25% தீபாவளி போனஸ் – வலுக்கும் கோரிக்கை!!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு 25% தீபாவளி போனஸ் - வலுக்கும் கோரிக்கை!!
தமிழக அரசு ஊழியர்களுக்கு 25% தீபாவளி போனஸ் - வலுக்கும் கோரிக்கை!!
தமிழக அரசு ஊழியர்களுக்கு 25% தீபாவளி போனஸ் – வலுக்கும் கோரிக்கை!!

தமிழக போக்குவரத்து மற்றும் மின் வாரியம் உள்ளிட்ட துறைகளின் கீழ் வேலை செய்யும் ஊழியர்களுக்கு குறைந்தது 25% தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தீபாவளி போனஸ்:

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில் தமிழக அரசு ஊழியர்கள் தீபாவளி போனஸுக்காக காத்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.7,000 வரையிலும் தீபாவளி போனஸ் வழங்கபட்டுள்ளது. அதனால் தமிழக அரசு ஊழியர்கள் விரைவில் போனஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதனிடையே, தமிழக போக்குவரத்து மற்றும் மின் வாரியம் உள்ளிட்ட துறைகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு தமிழக அரசு 25% தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

காவல்துறைகளில் 13,000 காலிப்பணியிடங்கள் – ஜூலை 2024க்குள் நிரப்ப முடிவு!!

ஒவ்வொரு வருடமும் தமிழக அரசு ஊழியர்களுக்கு 20%வரைக்கும் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக அரசுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டதால் 10% மட்டுமே தீபாவளி வழங்கப்பட்டது. தற்போது தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளத்தையடுத்து இந்த வருடமாவது விலைவாசியை கருத்தில் கொண்டு தொழிலாளர்களுக்கு 25% தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!