குடியரசு தினவிழா அணிவகுப்பு பாராட்டு – 12 தமிழக மாணவர்கள் தேர்வு!!

0
குடியரசு தினவிழா அணிவகுப்பு பாராட்டு - 12 தமிழக மாணவர்கள் தேர்வு!!
குடியரசு தினவிழா அணிவகுப்பு பாராட்டு - 12 தமிழக மாணவர்கள் தேர்வு!!
குடியரசு தினவிழா அணிவகுப்பு பாராட்டு – 12 தமிழக மாணவர்கள் தேர்வு!!

இந்தியாவின் 72-வது குடியரசு தினவிழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து 12 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். அவர்களில் பாரதியார் பல்கலைக்கழகம் மாணவர்கள் 5 பேர் டெல்லியிலும், சென்னை நிகழ்ச்சியில் பங்கேற்க 9 மாணவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதால் அந்த மாணவர்களுக்கு பாரதியார் பல்கலை துணைவேந்தர் காளிராஜ், நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வழி அனுப்பி வைத்தார்.

குடியரசு தினவிழா:

இந்தியாவில் குடியரசு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அடுத்தாண்டு குடியரசு தினத்தை சிறப்பாக கொண்டாடும் நோக்கில் டெல்லியில் உள்ள ராஜ்பாத்தில் குடியரசு தின அணிவகுப்பை நடத்தும் திட்டங்கள் கொரோனா தொற்றுக்கு மத்தியில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடந்து கொண்டிருக்கின்றன. இங்கிலாந்தில் புதிய உருமாறிய வைரஸ் பாதிப்பின் அச்சுறுத்தல் இருந்த போதிலும் இங்கிலாந்து பிரதமர் இந்திய குடியரசு தின விழாவுக்கு வருகை தருவார் என்று வெளியுறவு அமைச்சகம் ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது.

10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கு கூடுதல் அவகாசம் தேவை – மாணவர்கள் கோரிக்கை!!!

இந்நிலையில் குடியரசு தினம் அன்று பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம் இதற்கான ஏற்பாடுகள் ஒருபக்கம் நடைபெற்று வருகின்றன. இதன்படி டெல்லியில் குடியரசு தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் 12 பேர் தேர்வாகியுள்ளனர். அதில் பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் 5 பேர். மேலும் சென்னையில் நடைபெறும் குடியரசு தின நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 9 பேர் தேர்வாகி உள்ளனர்.

புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் – அரசு பணியாளர்கள் கோரிக்கை!!!

தேர்வாகிய மாணவர்களை பாரதியார் பல்கலைக்கழகம் குழு சார்பாக துணைவேந்தர் காளிராஜ் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வழி அனுப்பி வைத்தார். அந்த மாணவர்கள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு பின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!