புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் – அரசு பணியாளர்கள் கோரிக்கை!!!

0
புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் - அரசு பணியாளர்கள் கோரிக்கை!!!
புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் - அரசு பணியாளர்கள் கோரிக்கை!!!
புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் – அரசு பணியாளர்கள் கோரிக்கை!!!

தமிழகத்தில் ஏற்கனவே 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 6-வது மாவட்டமாக மயிலாடுதுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்தந்த மாவட்டங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் அலுவலங்களில் உயர் அதிகாரிகளின் பணியிடங்கள் மட்டுமே நிரப்படுவதாகவும் மற்ற இடங்கள் நிரப்புவதில் தாமதம் ஏற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

புதிய மாவட்டங்கள்:

தமிழகத்தில் நிர்வாக சுமையை குறைப்பதற்காக புதிதாக 6 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளது. இதனால் ஒன்றாக இருந்த மாவட்டங்கள் பிரிவினால் நிர்வாகிகள் இரண்டு இடங்களிலும் வேலை செய்யும் நிலைமை ஏற்படுகிறது. குறிப்பாக அரசு துறைகளில் உயர்பதவி அதிகாரிகள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையில் டிஎஸ்பி, காவல் ஆய்வாளர்கள் மற்றும் பிற அரசுத் துறைகளிலும் கீழ் நிலையிலுள்ள சில காலியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் குற்றச்சாட்டு நிலவுகிறது.

மத்திய அரசு பணிகளுக்கு 2021 முதல் ஆன்லைனில் தேர்வு – அமைச்சர் அறிவிப்பு!!

இதுகுறித்து சட்டப்பேரவை கூட்டத்தில் கருது தெரிவிக்கப்பட்டது அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி “‘புதிய காவல் நிலையங்கள் உருவாக்கப்படும், புதிய மாவட்டங்களில் காவல்துறையில் புதிய பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அறிவித்தார். ஆனால் மதுரை மண்டல காவல்துறை சார்பாக எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

பொதுமக்களின் நலன் கருதி, நிர்வாகம் தொய்வின்றி நடக்க, புதிய மாவட்டங்களின் காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே காவல், பிற அரசுத் துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதனால் பதவி உயர்வுக்கு காத்திருந்த அரசு பணி அலுவலர்கள் நிலைமை கேள்விக்குறியாகவே உள்ளது.

நீதிமன்ற வழக்குகளுக்கு உடனடி நடவடிக்கை- பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு!!

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட6 புதிய மாவட்டங்களுக்கு நிர்வாக ரீதியில் உயர் அதிகாரிகள் நிலை (ஆட்சியர், எஸ்.பி) தவிர பிற துறைகளில் போதிய ஆட்களை நியமிக்கவில்லை. சட்டம், ஒழுங்கு பராமரித்தல், 2021-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு புதிய மாவட்டத்திற்கான நியமன ஒதுக்கீடுகளை நிரப்ப வேண்டும். இதன் மூலம் பதவி உயர்வுக்காகக் காத்திருப்போர் பயன்பெறுவர்” என்றனர். மேலும் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் விரைவில் அனைத்து இடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!