1முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் ஆல்பாஸ் – தமிழக அரசு முடிவு!!

3
1முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் ஆல்பாஸ் - தமிழக அரசு முடிவு!!
1முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் ஆல்பாஸ் - தமிழக அரசு முடிவு!!
1முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் ஆல்பாஸ் – தமிழக அரசு முடிவு!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கும் நிலையில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற வைப்பது பற்றி அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

1 முதல் 9 வரை ஆல்பாஸ்:

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கடந்த மார்ச் மாதம் முதல் அமல்படுத்தப்பட்டது. அதனால், பள்ளிகள் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன. பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12 மாணவர்களில் 11, 12 வகுப்பு மாணவர்கள் மட்டும் தேர்வு எழுதினார். 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என அறிவித்தது தமிழக அரசு. மேலும், அவர்களது காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் மற்றும் அவர்களின் வருகை பதிவேடுகளில் அடிப்படையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. மேலும் 2019-2020 கல்வி ஆண்டில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் ஆல்பாஸ் என அறிவித்தது தமிழக அரசு.

ஐஐடி பாதிப்பு 191ஆக அதிகரிப்பு – தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு??

ஊரடங்கில் தளர்வுகள் விதிக்கப்பட்டபின் கல்லூரிகள் தொடங்கப்பட்டதன. கல்லூரிகள் திறந்து சில நாட்களிலேயே கொரோனாவால் மாணவர்களும் ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டனர். மேலும், மற்ற மாநிலத்தில் பள்ளிகள் திறந்த சில தினங்களிலேயே மாணவர்களும் ஆசிரியர்களும் அதிகஅளவில் பாதிக்கப்பட்டனர். இதனால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறப்பு அடுத்த 5 மாதங்களுக்கு தள்ளிபோடப்படுகிறது அதனால் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடத்தலாம் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் மொழியிலும் JEE Main2021 தேர்வு – மத்திய அரசு அறிவிப்பு!!!

இந்நிலையில் 2020-2021 ஆண்டிற்க்கான மாணவர்களின் தேர்ச்சி பற்றி ஆலோசனை நடைபெற்று வருகிறது. மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்தல் முடிந்த பின் தேர்வு எழுதுவார்கள் என அரசு அறிவித்தது. மேலும், 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களின் தேர்ச்சி பற்றி கூறும் போது, 1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற வைப்பது பற்றி பேச்சு வார்த்தை நடத்தப்படுவதாக கல்வித்துறை வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here