ஐஐடி பாதிப்பு 191ஆக அதிகரிப்பு – தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு??

0
ஐஐடி பாதிப்பு 191ஆக அதிகரிப்பு - தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு
ஐஐடி பாதிப்பு 191ஆக அதிகரிப்பு - தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு
ஐஐடி பாதிப்பு 191ஆக அதிகரிப்பு – தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு??

சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள மற்ற கல்வி நிறுவனங்கள் பள்ளிகள் திறப்பு போன்றவை தள்ளி போடப்படுகிறது.

பள்ளிகள் திறப்பு எப்போது?

கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் பள்ளிகள் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன. ஊரடங்கில் தளர்வுகள் விதிக்கப்பட்டபின் கல்லூரிகள் 7ம் தேதி முதல் இறுதியாண்டு மாணவர்களுக்கு தொடங்கப்பட்டது. கல்லூரிகள் திறந்து சில நாட்களிலேயே சென்னை கிண்டியில் உள்ள நிறுவனமான ஐஐடியில் 190க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

தமிழ் மொழியிலும் JEE Main2021 தேர்வு – மத்திய அரசு அறிவிப்பு!!!

ஐஐடி நிறுவனத்தில் அத்தனை கட்டுப்பாடுகள் விதிமுறைகள் பின்பற்றபட்ட போதிலும் இத்தனை பேருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது. அங்கு வேலை பார்ப்பவர்களும், படிக்கும் மாணவர்களும், ஆசிரியர்களும் அறிவியல் அறிவு உள்ளவர்கள் தான், மேலும் அங்கு மருத்துவமனையும் உள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று அங்கு பரவி 180க்கும் மேலானோர் சிகிச்சையில் உள்ளனர். மேலும், பல கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அங்குள்ள மாணவர்களுக்கு எப்படிபட்ட பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது என்பதை கண்காணிக்க பட வேண்டும் எனவும் மக்கள் கருதுகிறார்கள்.

நகர்ப்புற அரசு மாணவிகளுக்கும் இலவச நாப்கின்- தமிழக அரசு அறிவிப்பு!!!

இது பற்றி சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, ஐஐடி-யில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிண்டி கொரோனா மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் அனைவரும் நலமுடன் இருக்கிறார்கள். மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தில் பரிசோதனை நடைபெற்று வருகிறது. அங்கு ஒருசில மாணவர்களுக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு கூறியுள்ள பாதுகாப்பு வழிமுறைகளை மாணவர்களும், கல்வி நிர்வாகங்களும் கண்டிப்பாகப் கடைபிடிக்க வேண்டும். தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருக்கும் நிலையில், மக்கள் ஒரு சிறிய தவறு செய்தாலும் அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். முகக்கவசங்களை அனைவரும் கண்டிப்பாக அணியவேண்டும். எப்போதுமே தனிமனித இடைவெளியைப் பின்பற்றவேண்டும்” என்று கூறினார்.

மற்ற மாநிலத்தில் பள்ளிகள் திறந்த சில தினங்களிலேயே மாணவர்களும் ஆசிரியர்களும் அதிகஅளவில் பாதிக்கப்பட்டனர். இதனால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இந்நிலையில் ஐஐடி வளாகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறப்பு அடுத்த 5 மாதங்களுக்கு தள்ளிபோடப்படுகிறது என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!