தமிழ் மொழியிலும் JEE Main2021 தேர்வு – மத்திய அரசு அறிவிப்பு!!!

0
தமிழ் மொழியிலும் JEEmain2021 தேர்வு - மத்திய அரசு அறிவிப்பு!!!
தமிழ் மொழியிலும் JEEmain2021 தேர்வு - மத்திய அரசு அறிவிப்பு!!!

தமிழ் மொழியிலும் JEE Main 2021 தேர்வு – மத்திய அரசு அறிவிப்பு!!!

அடுத்த கல்வி ஆண்டிற்கான ஜேஇஇ மெயின் 2021 தேர்வு நான்கு கட்டமாக நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் தற்போது தமிழ் உள்ளிட்ட 12 மொழிகளில் தேர்வு நடக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

ஜேஇஇ மெயின் 2021:

நாடு முழுவதிலும் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கு ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் தற்போது அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மற்றும் மே ஆகிய மாதங்களில் 4 முறையாக தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

முதல்கட்ட தேர்வு பிப்ரவரி மாதம் 22 முதல் 25 ஆம் தேதி வரையில் தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் JEE Main 2021 தேர்வில் விருப்பமுள்ள மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2021-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் முதற்கட்ட தேர்வில் ஆங்கிலம், இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மராத்தி, மலையாளம், ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய 13 மொழிகளில் தேர்வு நடைபெற உள்ளது. நாடு முழுவதும் இந்தி, ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளில் தேர்வு நடைபெற உள்ள நிலையில், பிற மொழிகளில் தேர்வுகள் அந்தந்த மாநிலங்களில் மட்டுமே நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!