கூகுள் நிறுவனத்தில் ஒரேநேரத்தில் 12000 ஊழியர்கள் பணிநீக்கம் – சுந்தர்பிச்சை விளக்கம்!!

0
கூகுள் நிறுவனத்தில் ஒரேநேரத்தில் 12000 ஊழியர்கள் பணிநீக்கம் - சுந்தர்பிச்சை விளக்கம்!!
கூகுள் நிறுவனத்தில் ஒரேநேரத்தில் 12000 ஊழியர்கள் பணிநீக்கம் - சுந்தர்பிச்சை விளக்கம்!!
கூகுள் நிறுவனத்தில் ஒரேநேரத்தில் 12000 ஊழியர்கள் பணிநீக்கம் – சுந்தர்பிச்சை விளக்கம்!!

கூகுள் நிறுவனம் ஒரே நேரத்தில் 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிலையில் அதற்கான காரணத்தை சுந்தர்பிச்சை தெரிவித்துள்ளார்.

பணி நீக்கம்:

உலகின் மிகப்பெரிய டெக்னாலஜி நிறுவனமான கூகுள் நிறுவனம் AI ஏகப்பட்ட தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து வருகிறது. கூகுள் நிறுவனத்தின் வருமானம் மற்றும் லாபம் குறையும் போது கூட ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் முயற்சியை மேற்கொள்ளவில்லை. இதுவே கூகுள் நிறுவனத்தின் மிக பெரிய பலமாக அமைந்தது. அந்த நேரத்தில், திடீரென கூகுள் நிறுவனம் 12,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது. ஒரே முயற்சியில் 12,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யபட்டதால் பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ரூ. 1000 உரிமைத்தொகையால் வந்த சிக்கல் – இனி இதெல்லாம் கிடையாது!!

இந்நிலையில், கடந்த டிச. 12ம் தேதி கூகுள் நிறுவனத்தில் ஆல் ஹேன்ட்ஸ் மீட்டிங் நடைபெற்றது. அந்த மீட்டிங்கில் கலந்து கொண்ட சுந்தர் பிச்சை ஊழியர்களின் கேள்விக்கு விளக்கமளித்தார். அப்போது, 12,000 டெக் ஊழியர்களை உலகளாவிய தனது வர்த்தகத்தில் திடீரென பணிநீக்கம் செய்தது ஏன் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் தவறான முடிவாக தான் இருந்தது எனவும், பணி நீக்கத்தை தவிர்த்துவிட்டு அதனை மாறுபட்ட முறையில் கையாண்டு இருக்க வேண்டும் எனவும் பதிலளித்துள்ளார்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!