
11 ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியது.. தமிழகம் முழுவதும் எவ்வளவு மாணவர்கள் இத்தேர்வு எழுதுறாங்கன்னு தெரியுமா..??
பொதுத் தேர்வுகள் என்பது மாணவர்களின் அறிவாற்றல் திறனை சோதிக்க அந்தந்த மாநில அரசுகளால் நடத்தப்படும் தேர்ச்சி தேர்வாகும். அந்த வகையில் தமிழக அரசு 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் நடக்கும் 11 ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, தமிழகத்தில் 11 ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் இன்று (05.03.2025) தொடங்கி வருகின்ற மார்ச் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் முதல் தேர்வாக இன்று தமிழ் உட்பட பிற மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 01.15 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் 3,316 தேர்வு மையங்களில், 8.23 லட்சம் மாணவ மாணவிகள் இத்தேர்வை எழுதுகின்றனர் என்றும், இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் ஏப்ரல் 19 ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.























