
சென்னையில் திடீரென கூடிய அனைத்துக் கட்சி கூட்டம்.. இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் முன்வைத்த கோரிக்கை என்ன தெரியுமா..??
மாநில மேம்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக அவ்வப்போது நாடாளுமன்ற அலுவலகத்தில் ஆலோசனை குழு கூட்டம் நிகழ்வது வழக்கமான செயல்முறையாகும். அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் இன்று (05.03.2025) சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கியது. இக்கூட்டத் தொடரில் கலந்து கொள்ள 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் பாஜக, நாதக மற்றும் தமாகா உள்ளிட்ட காட்சிகள் இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும், இந்த கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் “நாட்டின் நலனுக்காக மக்கள் தொகை கட்டுப்பாட்டை முனைப்பாக செயல்படுத்தியதால் தமிழ்நாட்டில் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டுள்ளது, முற்றிலும் நியாயமற்றது என்றும்,1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் அடுத்த 30 ஆண்டுகளுக்கு நாடாளுமன்ற தொகுதி வரையறுக்க பிரதமர் மோடி அவர்கள் நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும்” என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார்.


























