
10-ம் வகுப்பு அறிவியல் செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்யும் காலம் நீட்டிப்பு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அறிவியல் பாட செய்முறை பயிற்சி விண்ணப்ப பதிவு காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
செய்முறை பயிற்சி:
தமிழகத்தில் காலாண்டுத்தேர்வுக்கு பிறகு தற்போது தான் பள்ளி மாணவர்களுக்கு அடுத்த பருவத்தேர்விற்கான பாடத்திட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு பிறகு அரையாண்டுத் தேர்விற்கான கால அட்டவணை வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். இந்நிலையில், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாட செய்முறை பயிற்சி குறித்த அறிவிப்பை கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது.
CMC வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் கொட்டிக்கிடக்கும் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
அதாவது, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அறிவியல் பாட செய்முறை பயிற்சி விண்ணப்பம் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்த நிலையில் தற்போது மீண்டும் செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பிப்பதற்கான காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதாவது, செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் www.dge.tn.gov.in என்கிற இணையதள பக்கத்தின் மூலமாக நவ.6 முதல் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.