மத்திய அரசின் Spices Board-ல் Consultant வேலை – ரூ.60,000/- ஊதியம் || விரைந்து விண்ணப்பியுங்கள்!
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள Spices Board-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் Consultant பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.60,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் பெறவும்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Spices Board |
பணியின் பெயர் | Consultant |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline / Online |
Spices Board காலிப்பணியிடங்கள்:
Consultant பணிக்கென 01 பணியிடம் மட்டுமே Spices Board-ல் காலியாக உள்ளது.
Consultant கல்வி:
இந்த Spices Board சார்ந்த பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் Botany, Agriculture பாடப்பிரிவில் Ph.D பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Consultant முன்னனுபவம்:
விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் Pay Matrix Level – 11 / 12 என்ற ஊதிய அளவுகளின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் குறைந்தது 10 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அடுத்த ஜாக்பாட் – 8வது ஊதியக்குழு அமல்!!
Consultant வயது:
01.10.2023 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்கள் 63 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.
Consultant ஊதியம்:
இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.50,000/- முதல் ரூ.60,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
Spices Board தேர்வு செய்யும் முறை:
Consultant பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spices Board விண்ணப்பிக்கும் வழிமுறை:
இந்த Spices Board சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள அலுவலக முகவரிக்கு மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 15.11.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.
Download Notification & Application Form PDF