ஜீ தமிழ் ‘புதுப்புது அர்த்தங்கள்’ சீரியல் தேவயானியுடன் தங்கும் நமீதா – வெளியான ப்ரோமோ!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் “புது புது அர்த்தங்கள்” சீரியலில் நடிகை நமீதா நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகின் இரெண்டு நடிகைகள் ஒரே சீரியலில் நடிக்கவிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
“புது புது அர்த்தங்கள்” சீரியல்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஒளிபரப்பாக ஆரம்பித்த சீரியல் தான், “புது புது அர்த்தங்கள்” சீரியல் ஆகும். இந்த சீரியலில் நடிகை தேவயானி நடித்து வருகிறார். பல ஆண்டுகளாக திரைத்துறையில் வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தற்போது சீரியலில் நடித்து வருகிறார். குடும்ப தலைவியாக இருக்கும் தேவயானி தனது குடும்பம் மட்டுமே உலகம் என்று வாழ்கிறார்.
எம்.எல்.ஏ-க்களுக்கு பரிசு பொருட்கள், பிரியாணி ‘கட்’ – முதல்வர் அதிரடி உத்தரவு!
இப்படியாக இருக்க, இந்த சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. இதில் நடிகை நமீதா தேவயானி இருக்கும் பிளாட்டிற்கு வருகிறார். அந்த பிளாட்டில் குடியிருக்கும் அனைவரிடமும் தான் அங்கு 2 அல்லது 3 நாட்கள் தங்க இருப்பதாக கூறுகிறார். மேலும், நடிகை கதாபாத்திரத்திலேயே இந்த சீரியலில் நடித்து இருக்கிறார். ப்ரோமோவில் அவர் காரில் செல்லும் போது ஒரு இடத்தில் குழி இருக்கிறது.
TN Job “FB
Group” Join Now
அதற்கு எதாவது தீர்வு கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைக்கும் போது தேவயானியின் மகள் வந்து அந்த குழியினை அடைகிறார். இதனை பார்க்கும் நமிதாவிற்கு மிகவும் சந்தோசம் வந்து விடுகிறது. தேவயானியின் மகளை பாராட்டவும் செய்கிறார். இத்துடன் ப்ரோமோ முடிவடைகிறது. நமீதா வரவிருக்கும் காட்சிகள் கூடிய விரைவில் ஒளிபரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகை நமீதாவை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.