விரைவில் முடிய போகும் ஜீ தமிழ் சீரியல்.. வைரலாகும் நிறைவு விழா புகைப்படங்கள் – வெளியான சூப்பர் அப்டேட்!
ஜீ தமிழில் பல எபிசோடுகளை கடந்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த “புது புது அர்த்தங்கள்” சீரியல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் “புது புது அர்த்தங்கள் நிறைவு விழா” என்ற நிகழ்ச்சி விரைவில் ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கிறது.
புது புது அர்த்தங்கள்:
தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. முன்னணி நடிகர் நடிகைகள் சினிமாவை விட்டு சீரியலுக்கு வந்துள்ளனர். அந்த வகையில் அந்த காலத்தில் சினிமாவில் டாப் கதாநாயகியாக இருந்தவர் தான் நடிகை தேவயானி. அவர் சன் டிவியில் நடித்த கோலங்கள் சீரியல் மெகா ஹிட் ஆனது. அதன் பின் சின்னத்திரைக்கு வராத அவர் தற்போது ஜீ தமிழில் புது புது அர்த்தங்கள் என்ற சீரியலில் நடிக்க தொடங்கினார். இந்த சீரியல் வெற்றிக்கு தேவயானி மட்டும் ஒரு காரணமாக இல்லாமல் அதன் கதையும் ஒரு காரணமாக இருந்தது.
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில் இந்த சீரியல் 500க்கு அதிகமான எபிசோடுகளை கடந்து தற்போது கிளைமேக்ஸ் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பொதுவாக ஜீ தமிழில் 1000 எபிசோடுகளை கடந்த சீரியல்களுக்கு நிறைவு விழா நடத்தப்பட்டு அதில் நடிகர் நடிகைகள் கவுரவிக்கப்படுவார்கள். ஏற்கனவே செம்பருத்தி மற்றும் யாரடி நீ மோகினி சீரியல்களுக்கு இது போல நிறைவு விழா நடத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது புது புது அர்த்தங்கள் நிறைவு விழா என்ற நிகழ்ச்சி நடந்துள்ளது.
பிக் பாஸ் விஜே மகேஸ்வரியின் முன்னாள் கணவரை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் திருமண புகைப்படம்!
Exams Daily Mobile App Download
மேலும் இந்த நிகழ்ச்சியில் புது புது அர்த்தங்களை சேர்ந்த நடிகர் நடிகைகள் பலர் கலந்து கொண்டு இருக்கின்றனர். இந்த சீரியலின் கிளைமேக்ஸ் ஞாயிறு கிழமை சிறப்பு தொகுப்பாக ஒளிபரப்பாகி அதே நாளில் நிறைவு விழா ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜீ தமிழில் ஒரு ஊர்ல ஒரு ராஜா குமாரி 2 சீரியலும் இந்த வாரம் முடிவுக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.