ஒரே நாளில் பல முறைகள் முடங்கிய எக்ஸ் வலைத்தளம்.. பின்னணியில் மிகப்பெரிய  நாடு உள்ளது என எலான் மஸ்க் பகீரங்க குற்றச்சாட்டு..!!

0

ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவை வழங்கப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக உக்ரைன் நாட்டில் ஸ்டார்லிங்க் இணைய சேவையானது அதிகளவில் உபயோகிக்கப்பட்டு வருகிறது. மேலும், ரஷ்யா- உக்ரைன் போர் தொடர்பாக ஜெலன்ஸ்கிக்கும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதற்கு பின் எலான் மஸ்க்  மட்டும் தான் ஸ்டார்லிங்க் இணைய சேவையை நிறுத்தினால் உக்ரைன் நாடு முடங்கும் என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கிக்கு மிரட்டல் விடுத்திருந்தார். இந்நிலையில் இந்த மிரட்டலை தொடர்ந்து எலான் மஸ்கின் எக்ஸ் தளமானது முடக்கப்பட்டதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, உலகம் முழுவதும் எக்ஸ் தளம் ஆனது நேற்று (10-03-2025) ஒரே நாளில் மூன்று முறை முடங்கியது. இந்த நிகழ்வு குறித்து சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களின் முடக்கங்களைக் கண்காணிக்கும் Downdetector.com தரவுகளின் ஆய்வுகள் படி நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் முதல்முறையாக எக்ஸ் தளம் முடங்கிய நிலையில் மீண்டும் மாலை 7 மணியளவிலும் பிறகு 8.45 மணிக்கு எக்ஸ் தளத்தின் செயல்பாடுகள் முடங்கியதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் எக்ஸ் தளத்தின் மீது மிகப்பெரிய அளவிலான சைபர் தாக்குதல் நடந்துள்ளதாகவும், இதன் பின்னணியில் மிகப்பெரிய நாட்டின் தலையீடு உள்ளது என   எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!