ரயில்களில் பயணிக்கும் பெண்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு.. இந்தியன் ரயில்வே அமல்படுத்தியுள்ள சிறப்பு வசதி..

0

இந்திய ரயில்வே துறையானது தங்களது பயணிகள் எவ்வித சிரமமும் இன்றி பயணம் செய்ய ஏதுவாக புதுப்புது திட்டங்களை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் உள்ள அனைத்து முன்பதிவு பெட்டிகளிலும் மூத்த குடிமக்கள் அதாவது 45 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பெண் பயணிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோருக்கு, ஸ்லீப்பர் வகுப்பில் ஒவ்வொரு பெட்டியிலும் 7 கீழ் பெர்த்களும், மூன்றாம் ஏசி/இரண்டாம் ஏசியின் ஒவ்வொரு பெட்டியிலும் 4 கீழ் பெர்த்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் பல முறைகள் முடங்கிய எக்ஸ் வலைத்தளம்.. பின்னணியில் மிகப்பெரிய  நாடு உள்ளது என எலான் மஸ்க் பகீரங்க குற்றச்சாட்டு..!!

மேலும், “ராஜ்தானி/துரோண்டோ மற்றும் கரீப் ரத் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் இரண்டாவது ஏசி வகுப்பில் 4 இருக்கைகளும், மூன்றாம் ஏசி வகுப்பில் 6 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன என கூறப்படுகிறது. இந்த ஒதுக்கீடானது தனியாகவோ அல்லது குழுவாகவோ பயணிக்கும் பெண் பயணிகள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும், ஒதுக்கீட்டின் இருக்கைகள் முதலில் காத்திருக்கும் பெண் பயணிகளுக்கு வழங்கப்பட்ட பின்னரே மீதமுள்ள படுக்கைகள் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக ஒதுக்கப்பட்ட பிறகும் படுக்கைகள் எஞ்சியிருந்தால், ரயில்வே ஊழியர்கள் அவற்றை ரத்து செய்வதற்கு எதிரான முன்பதிவு (RAC) டிக்கெட்டுகளில் உள்ள மற்ற பெண்கள்/மூத்த குடிமக்களுக்கு ஒதுக்கீடு செய்யலாம்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!