
TN Budjet 2025- 26 : பள்ளி மாணவர்களுக்கு வெளியான அசத்தல் அறிவிப்புகள்..!! 1 கோடி பரிசுத்தொகையுடன் கூடிய புதிய ஒலிம்பியாட் போட்டி அறிவிப்பு
தமிழ்நாட்டின் 2025-26 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தற்போது தாக்கல் செய்து வருகிறார். இதில் புதிய தொழிற்பூங்காக்கள், மருத்துவமனை மேம்பாடு, மகளிர் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்ட விரிவாக்கம், புதிய விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் கல்வி துறைக்கான திட்டங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
அதாவது, முதலமைச்சரின் விரிவான காலை உணவு திட்டத்தை, இனிமேல் நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் வழங்க ரூ. 600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள 2,676 அரசு பள்ளிகளில் ரூ. 65 கோடி மதிப்பீட்டில் திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கவும், 880 அரசு பள்ளிகளில் ரூ. 56 கோடி மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மலைப்பகுதிகளில் மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க, உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்றும், அரசு பள்ளி மாணவர்களுக்கான உடற்கல்வி பாடத்திட்டத்தில் சதுரங்க ஆட்டம் சேர்க்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட்டில் தமிழ்மொழிக்கு என சிறப்பு நிதி ஒதுக்கீடு…!! முழு விவரங்கள் உள்ளே..!!
மேலும், தமிழ்நாட்டில் உள்ள 2000 அரசு பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்த்த ரூ. 160 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அத்துடன்”தமிழின் பெருமையை பரப்பிட பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.1 கோடி பரிசுத் தொகையுடன் கூடிய உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படும்” என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


























